வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் கடமலைக்குண்டுவில் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்
- தெருக்க ளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேனி சாலை ஓரமாக அமைந்துள்ள பெரிய சாக்கடை வடிகாலில் கலந்து பின்னர் வைகை ஆற்றில் கலந்து வருகிறது.
- தொடர்ந்து கடமலை க்குண்டு ஊராட்சி நிர்வா கத்தினர் இன்று முதல் சாக்கடை வடிகால்களை ஜே.சி.பி எந்திரம் மூலம் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கட மலைக்குண்டு கிராமத்தில் 3000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. அனைத்து தெருக்களுக்கும் சாக்கடை வடிகால்கள் கட்டப்பட்டுள்ளது. தெருக்க ளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேனி சாலை ஓரமாக அமைந்துள்ள பெரிய சாக்கடை வடிகாலில் கலந்து பின்னர் வைகை ஆற்றில் கலந்து வருகிறது.
பெரிய சாக்கடை வடிகாலில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில் குவிந்து காணப்பட்டது. இதனால் கழிவுநீர் செல்வ தில் தடை ஏற்பட்டு வந்தது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் சாக்கடை வடிகாலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள் காரணமாக மழைநீர் செல்ல தடை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
தூர்வாரும் பணி தீவிரம்
மேலும் மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் அபாயமும் ஏற்பட்டது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாக்கடை வடிகால்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து கடமலை க்குண்டு ஊராட்சி நிர்வா கத்தினர் இன்று முதல் சாக்கடை வடிகால்களை ஜே.சி.பி எந்திரம் மூலம் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சாக்கடை வடிகால்களில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்ட கூடாது என பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இந்த பணிகளை கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம், ஊராட்சி செயலர் சின்னச்சாமி ஆகியோர் மேற்பார்வை யிட்டு வருகின்றனர்.