உள்ளூர் செய்திகள்

தொப்பூர் பாலத்து முனியப்பன் கோவிலில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

Published On 2022-11-28 15:11 IST   |   Update On 2022-11-28 15:11:00 IST
  • பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
  • கோவில் வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம் தொப்பூர் பாலத்து முனியப்பன் கோவிலில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி ஆலோசனைப்படி தொப்பூர் ஊராட்சியில் தி.மு.க. நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய செயலாளர் கே.பி. மல்லமுத்து முன்னிலையில் மாவட்ட பிரதிநிதி ராமநாதன் தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மேலும் தொப்பூர் பாலத்து முனியப்பன் கோவில் வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, ஒன்றிய நிர்வாகிகள் கலா ராணி கண்ணன், மாதையன், மோகன், மணி, துரை, தங்கம், ராஜா, வெங்கடேசன், தேவராசன், ஈஸ்வர் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News