உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருது வழங்கினார்.

கும்பகோணம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவிக்கு விருது வழங்கல்

Published On 2023-05-01 09:22 GMT   |   Update On 2023-05-01 09:22 GMT
  • சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
  • அண்ணா பல்கலைக்கழக சிறந்த நாட்டு நலப்பணி திட்ட விருதை பெற்றார்.

கும்பகோணம்:

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் நாட்டு நலப்பணி திட்டத்தில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா பல்கலைக்கழக விவேகா னந்தா கலையரங்கத்தில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இதில் கும்பகோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவி ராஜஸ்ரீ அண்ணா பல்கலைக்கழக சிறந்த நாட்டு நலப்பணி திட்ட விருதை பெற்றார்.

அப்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், பதிவாளர் ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

அரசு என்ஜினீயரிங் கல்லூரி தலைவர் செந்தில்குமார், ஆலோசகர் பேராசிரியர் கோதண்டபாணி, முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் ருக்மாங்கதன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஆனந்த குமார் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் மாணவியை பாராட்டினர்.

Tags:    

Similar News