உள்ளூர் செய்திகள்

வடக்கு போலீஸ் நிலையத்தில் மதுபானங்கள் கொட்டி அழிக்கப்பட்ட காட்சி.

வழக்கு முடிந்த நிலையில் பீர், பிராந்தி பாட்டில்கள் கொட்டி அழிப்பு

Published On 2022-11-05 13:24 IST   |   Update On 2022-11-05 13:24:00 IST
  • மதுவிலக்கு போலீசாரால் பல்வேறு இடங்களில் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைக்கப்படுகின்றன.
  • நகர்வடக்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு முடிந்த நிலையில் இருந்த கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் இன்று கொட்டி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு அனுமதி இன்றி மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள், வெளியிடங்களில் மதுபானங்களை வாங்கி விற்பவர்கள் ஆகியோரிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைக்கப்படுகின்றன.

இதுதவிர வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் மற்றும் வாகனங்கள் மூலம் கடத்தி வரப்படும் மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டு இங்கு வைக்கப்பட்டிருந்தது. வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் செலுத்திய பிறகு கைப்பற்றப்பட்ட மதுபானங்கள்கொட்டி அழிக்கப்படும்.

அதன்படி நகர்வடக்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு முடிந்த நிலையில் இருந்த கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் இன்று கொட்டி அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைைமயில் போலீசார் பீர் மற்றும் பிராந்தி பாட்டில்களை தரையில் குழி தோண்டி அதில் ஊற்றி அழித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.

Tags:    

Similar News