உள்ளூர் செய்திகள்

கோவை அரசு கலைக் கல்லுாரி இளங்கலை படிப்புகளுக்கு 27-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

Published On 2022-06-20 09:26 GMT   |   Update On 2022-06-20 09:26 GMT
  • மாணவர்களின் வசதிக்காக வரும், 27-ந் தேதி முதல் கல்லூரியில் தகவல் மையம் செயல்படும்.
  • விண்ணப்பங்கள் கல்லுாரியில் நேரடியாக விற்பனை செய்யப்படாது. பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை:

கோவை அரசு கலைக் கல்லுாரியில் 23 இளங்கலை பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் இளநிலை படிப்பு முதலாம் ஆண்டில் மொத்தம் 1,433 இடங்கள் உள்ளன. அதன்படி வரும், 2022–-23 ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.

இதற்காக மாணவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். www.tngasa.org, www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக வரும், 27-ந் தேதி முதல், ஜூலை, 15-ந் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் கல்லுாரியில் நேரடியாக விற்பனை செய்யப்படாது. பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று, பிளஸ்2 முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், விண்ணப்பங்கள் பெற மாணவர்கள், பெற்றோர் நேரடியாக கல்லுாரிக்கு வரத்தேவையில்லை என, கல்லுாரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாணவர்களின் வசதிக்காக வரும், 27-ந் தேதி முதல் கல்லூரியில் தகவல் மையம் செயல்படும் என, நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News