உள்ளூர் செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலி
- உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலியானார்.
- கணபதி பாண்டூர் பகுதியில் உள்ள சக்திவேல் என்பவர் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா உ.நெமிலி பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 28)கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று வழக்கம் போல் நெமிலி அருகே பாண்டூர் பகுதியில் உள்ள சக்திவேல் என்பவர் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கொடுத்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.