உள்ளூர் செய்திகள்
கைது செய்யபட்டவர்.
கள்ள சாராயம் காய்ச்சி விற்றவர் கைது
- கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
- சுமார் 5 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
பாப்பாரப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பிக்கம்பட்டி அருகே உள்ள திப்பட்டி பள்ளத்தை சேர்ந்தவர் கண்ணாமணி (வயது 59 ).
இவர் வீட்டில் கள்ள சாராயம் காய்ச்சி விற்பதாக பாப்பாரப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் சென்று கண்ணாமணி வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது சுமார் 5 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் கண்ணாமணி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.