மாதானம் முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா
- ஆடி கடைசி வெள்ளியை யொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்ததிக்கடன் செலுத்தினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாதானம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி துண்டுகளாக போடப்பட்ட புளியமரம் மீண்டும் துளிர்விட்டு பெரிய மரமாக காட்சியளித்து வருகிறது.
இந்த கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி க்கிழமையையொட்டி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மாலை சித்தர்கள் கரகம் மற்றும் காவடி எடுத்து வந்து கோயில் முன்புறம் உள்ள கீழ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் 10,000 பேர் கலந்துகொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்ததிக் கடன் செலுத்தினர்.
விழாவை முன்னிட்டு சீர்காழி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சீர்காழி மற்றும் சிதம்பரத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா விற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மயிலாடுது றை ஏ.டி.எஸ்.பி வேனு கோபால் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை ஈடுபட்டிருந்தனர்.
சீர்காழி தீயணைப்பு அலுவலர் ஜோதி தலைமையில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுக ளை கிராம மக்கள் சார்பில் முத்து மாரியம்மன் கோயில் ஆலய அறங்காவலர் நடராஜ் செய்திருந்தார்.