உள்ளூர் செய்திகள்
தியாகதுருகம் அருகே பொதுப்பாதை சம்பந்தமாக தகராறு: வாலிபர் கைது
- செல்வி ஆகியோரை ஆபாசமாக பேசி, தாக்கி, செல்வியின் சேலையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது.
- மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 54) இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (55) என்பவருக்கும் பொது பாதை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தி அவரது மகன் பெரியசாமி (33) ஆகியோர் பழனி மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோரை ஆபாசமாக பேசி, தாக்கி, செல்வியின் சேலையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனி மகன் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.