பள்ளிகல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான போட்டிகள்
- வினாடி வினா , கதை விமர்சனம் ஆகிய பிரிவு களில் போட்டிகள் நடை பெற்றன.
- 2 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட அளவிலான போட்டி களுக்கு அனுப்ப படுகின்றனர்.
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்தறை தருமபுரி வட்டார வள மையம் சார்பில் வட்டார அளவிலான போட்டிகள் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் வட்டார வளமை யத்துக்குட்பட்ட அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்குட்பட்ட பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கட்டுரை, பேச்சு, கவிதை எழுதுதல், குறும்படம் தயாரித்தல், தனி நடிப்பு, அறிவியல் கண்காட்சி, அறிவியல் செயல்திட்டம், அறிவியல் நாடகம், வினாடி வினா மற்றும் கதை விமர்சனம் ஆகிய பிரிவு களில் போட்டிகள் நடை பெற்றன.
இதில் வட்டார அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட அளவிலான போட்டி களுக்கு அனுப்ப படுகின்றனர்.
வட்டார அளவிலான போட்டிகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா நடத்தினார். இதில் அவ்வையார் மகளிர் மேல்நி லைப் பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, வட்டாரக் கல்வி அலுவ லர்கள் ஜீவா, நாசர், கலை ச்செல்வி, வட்டார ஒருங்கி ணைப்பாளர் பானுரேகா மற்றும் ஆசிரியர் பயிற்று நர்கள் கலந்து கொண்டனர்.