உள்ளூர் செய்திகள்

பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசினார்.

கர்நாடகாவிடம் இருந்து உரிய நீரை பெற தி.மு.க. அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை- டி.டி.வி.தினகரன்

Published On 2023-09-16 15:16 IST   |   Update On 2023-09-16 15:16:00 IST
  • வரும் காலங்களில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்.
  • நீட் தேர்வை நீக்குவோம் என கூறினார்கள். ஆனால் அதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை.

சீர்காழி:

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் அ.ம.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பொன். பாரிவள்ளல் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி, தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ், நாகை மாவட்ட செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சீர்காழி நகரக் செயலாளர் அருண் பாலாஜி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது ;-

கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என ஒவ்வொரு வீட்டிலும் கல்விக் கண்ணை திறந்து வைத்தவர் தான் அறிஞர் அண்ணா. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்கிற அண்ணாவின் வழியிலே ஏழைகளுக்கான பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர்கள் தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா.

அ.தி.மு.க. பொதுசெ யலாளராக பழனிச்சாமி இருக்கும் வரை அ.தி.மு.க எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது.

பாராளுமன்ற தேர்தலில் தீய சக்தி தி.மு.க.வையும், துரோக சக்திகளையும் மக்கள் தோற்கடிப்பார்கள்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு கூட நமக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா தர மறுக்கிறது.

வரும் காலங்களில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்.

வறுமையை தள்ளுவதற்கு கர்நாடக அரசு முயல்கிறது.

அதற்கு தி.மு.க அரசு துணை போகிறது.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகளைப் பற்றியோ ஏழை எளிய மக்களை பற்றியோ கவலை இல்லை.

பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியை பற்றி மட்டுமே அவர் சிந்தித்து வருகிறார்.

அதனால் தான் இதுவரை தண்ணீர் பெறுவதற்கான எந்த முயற்சியையும் அவர் மேற்கொள்ளவில்லை.

அனைத்து குடும்பங்களு க்கும் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்துவிட்டு பெயர் அளவில் மகளிர் உரிமை திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

தேர்தல் வாக்குறுதி அறிவித்த வாக்குறுதிகளை 99 சதவீதம் நிறைவேற்றியதாக கூறும் தி.மு.க நீட் தேர்வை நீக்குவோம் என கூறினார்கள்.

ஆனால் அதற்கான நடவடிக்கை என்ன என்பதை தெரியவில்லை. சிலிண்டர் மானியம் ரூ.100 இதுவரை வழங்கவில்லை.

மின்கட்ட ணம், முத்திரை த்தாள் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

ஆவின் பால் பொருட்களை உயர்த்தி உள்ளனர்.

இதில் தான் முதல்வர் ஸ்டாலின் சாதனை செய்துள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றாக அ.ம.மு.க. தான் வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் பொன் பாரிவள்ளல், பொதுச்செய லாளர் டி.டி.வி தினகரனுக்கு ஆள் உயர மாலை அணிவித்து வெள்ளிவாளை நினைவு பரிசாக வழங்கினார்.

முன்னதாக தலைமை பேச்சாளர் இருள் நீக்கி சேகர் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்வாணன் நன்றி கூறினார்.

முன்னதாக சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட கழகம் சார்பில் பாரிவள்ளல் தலைமையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு டி.டி.வி தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News