உள்ளூர் செய்திகள்

மத்திய மந்திரி எல்.முருகனிடம் பா.ஜனதா மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், ஊராட்சித் தலைவர் பிரதீபாஜெயசீலன் ஆகியோர் மனு அளித்தனர். அருகில் ஒன்றிய தலைவர் சரவணன், மாநில இளைஞரணி செயலர் டாக்டர் பூபதிபாண்டியன் உள்ளனர்.

பெரியதாழையில் தூண்டில் வளைவில் மின்விளக்கு கோபுரங்கள் அமைக்க வேண்டும்- மத்திய மந்திரி எல். முருகனிடம் பா.ஜனதா மாவட்ட தலைவர் மனு

Published On 2022-08-22 09:27 GMT   |   Update On 2022-08-22 09:27 GMT
  • புதிதாக அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு நுழைவு வாயில் வழியாக மீன் பிடித்து வரக்கூடிய படகுகள் கரைக்கு திரும்புகின்றன.
  • மின் விளக்குகள் இல்லாத காரணத்தால் படகுகள் தூண்டில் வளைவில் மோதி சேதம் அடைவதாக அதில் கூறியுள்ளார்.

சாத்தான்குளம்:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சித்ராங்கதன், மத்திய இணை மந்திரி எல். முருகனிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு நுழைவு வாயில் வழியாக மீன் பிடித்து வரக்கூடிய படகுகள் கரைக்கு திரும்புகின்றன. இதன் நுழைவு வாயில் பகுதியில் மின் விளக்குகள் இல்லாத காரணத்தாலும், இருட்டாக இருக்கின்ற காரணத்தாலும் படகுகள் தூண்டில் வளைவில் மோதி சேதம் அடைந்து வருகின்றன. இதனால் மீனவர்களுக்கு பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க தூண்டில் வளைவு நுழைவு வாயில் பகுதியில் 4 சோலார் மின்விளக்கு கோபுரங்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News