உள்ளூர் செய்திகள்
பந்தலூரில் வாகனங்களை வழிமறித்த யானைகள்
- யானைகள் வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்
- பந்தலூரில் யானைகள் அட்டகாசம் தொடர்கிறது
நீலகிரி
பந்தலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சேரம்பாடியில் இருந்து கூடலூர் சென்ற வாகனங்களை காட்டு யானைகள் வழிமறித்தன.
இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு அய்யன்கொல்லி அருகே கோட்டப்பாடி வழியாக கருத்தாடு பகுதிக் குள்காட்டுயானை நுழைந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
தகவல் அறிந்த பிதிர்காடு வனகாப்பாளர் ராஜேஸ்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.2 தேயிலை தோட்ட பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன.
அங்கு குடியிருப்புகளை ஒட்டி உலா வருவதால், சேரம்பாடி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.