உள்ளூர் செய்திகள்
அதிக குழந்தைகளை ஏற்றி சென்ற 12 ஆட்டோக்கள் பறிமுதல்
- பள்ளி குழந்தைகளை ஏற்றி சொல்லும் வாகனங்களை சோதனை செய்தனர்.
- 12 ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி, மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் கரூர் சாலை, சோலார் பகுதி, நாடார் மேடு பகுதிகளில் ஆட்டோ உள்ளிட்ட பள்ளி குழந்தைகளை ஏற்றி சொல்லும் வாகனங்களை சோதனை செய்தனர்.
அப்போது பள்ளி குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றி சென்றது, தகுதி சான்று காப்பு சான்று ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட 12 ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.