உள்ளூர் செய்திகள்
- சிறு,குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
- விவசாயிகளுக்கான மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்.
பல்லடம் :
பல்லடத்தில் விவசாயிகள் ஐக்கிய சங்கம் சார்பில், விவசாயிகளின் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் செய்ய வேண்டும்.
சிறு,குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கான மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்.
60 வயதான விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ. 6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்லடம் ராயர்பாளையம் பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை டிராக்டர் பேரணி நடைபெற்றது.
இதில் 5க்கும் மேற்பட்ட டிராக்டர்கள்,5 கார்கள், 10 மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்றனர். இதில் சுமார் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.