உள்ளூர் செய்திகள்

கடையில் தீ விபத்து; ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்

Published On 2023-09-25 16:47 IST   |   Update On 2023-09-25 16:47:00 IST
  • தரும்புரி கடை வீதியில் பூஜைப்பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.7 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம் ஆனாது.
  • இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

தருமபுரி நகர் தேர்முட்டி என்ற பகுதியில் உள்ள கடைவீதியில்நகைக் கடைகள் காய்கறி கடைகள் பழக்கடைகள் மற்றும் பூஜை சாமான்கள் விற்கக்கூடிய கடைகள் அதிகளவில் உள்ளன. இங்குள்ள தனியார் பில்டிங்கில் சக்திவேல் மகன் பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான பூஜை சாமான்கள் விற்பனை கடை உள்ளது.

இந்த கடையின் மேல் பகுதியில் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு அவர் கடையை பூட்டிவிட்டு மேலுள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு சுமார் 10 மணி அளவில் திடீரென கடையின் விளம்பர பலகை பகுதியில் இருந்து புகை வந்ததை கண்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தெரி வித்தனர்.

வந்து பார்த்தபோது கடையில் உள்ளே பூஜை பொருட்களான பாக்கு தட்டு, பூஜைக்கு பயன்படுத்தும் விளக்கு எண்ணெய், கர்பூரம், யாக பூஜைகளுக்கு பயன்படுத்தும் அனைத்து வகை பூஜை சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்து மளமள என்று எரிய தொடங்கியது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த தருமபுரி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான தீயணைப்புத்துறைநினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அக்கம்பக்கத்தில் மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் உள்ளே இருந்த சுமார் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள பூஜை பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்ப டுகிறது.

முதற்கட்ட விசா ரணையில், கடையில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மின்சாரத் துறை ஊழியர்கள் கடைவீதி பகுதியில் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து, தீயை அணைத்த பிறகு மீண்டும் மின் இணைப்பை வழங்கினார்கள். இது குறித்து தருமபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News