உள்ளூர் செய்திகள்
நொச்சிகுப்பத்தில் மீனவர்கள் மீண்டும் போராட்டம்
- மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை கடந்த வாரம் மாநகராட்சி அகற்றியது.
- இன்று மீண்டும் மீனவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை கடந்த வாரம் மாநகராட்சி அகற்றியது. மீன் கடைகளை இங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது என சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் மீனவர்கள் போராட்டத்தில் இறங்கினர். லூப் சாலையில் தடுப்பை ஏற்படுத்தி சிலர் கோஷங்களை எழுப்பினர். மீன் கடைகள் அங்கு செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.