சீர்காழியில், மீனவர்கள் ஆலோசனை கூட்டம்
- மீனவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- அடுத்த மாதம் 18-ந் தேதி தி.மு.க. சார்பில் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் திமுக சார்பில் மாவட்ட அளவிலான மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் எம்எல்ஏ, கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து .மகேந்திரன், ஜி என் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தேசப்பன் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் கலந்து கொண்டு மீனவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு பேசியதாவது, மீனவர்கள் தங்கள் பகுதியில் உள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து கோரிக்கை மனுக்களாக கொடுத்துள்ளீர்கள் இதனை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கையை எடுக்கப்படும்.
தமிழக அரசு தற்பொழுது பல்வேறு கடற்கரை கிராமங்களில் மண் அரிப்பை தடுக்க நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
மேலும் உப்பு நீர் ஊருக்குள் புகாத வகையில் பல்வேறு உப்பனாற்றில் தடுப்பணைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. துறைமுகங்கள் சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
மீனவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீனவர் நலன்களை பாதுகாக்கும் வகையில் அடுத்த மாதம் 18ம் தேதி தி.மு.க. சார்பில் ராமேஸ்வ ரத்தில் மீனவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சாமிநாதன், நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், விஜயகுமார், மலர்விழி, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.