உள்ளூர் செய்திகள்
போடி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை
- தேனி மாவட்டம் போடி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.
- புகையிலை விற்ற 7 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.
அதன்பேரில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் தலைமையில் போடி வட்டார உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் சரண்யா அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
போடி மீனாட்சிபுரம், சிலமரத்துப்பட்டி, மீனாவிலக்கு ஆகிய பகுதிகளில் புகையிலை விற்ற 7 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.