உள்ளூர் செய்திகள்

முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்

பெரியகுளம் அருகே இலவச பொது மருத்துவ முகாம்

Published On 2022-06-19 11:37 IST   |   Update On 2022-06-19 11:37:00 IST
  • பெரியகுளத்தில் பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் குறித்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
  • இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்ட தி.மு.க மாணவரணி சார்பாக வத்தலக்குண்டு சக்தி கிளினிக் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாமை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கில் ஸ்டீபன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

இம்முகாமில் பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்து மருத்துவர்களால் அறிவுரை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் கெங்குவார்பட்டி தி.மு.க பேரூர் செயலாளர் தமிழன், பேரூராட்சி சேர்மன் தமிழ்செல்வி சவுந்தர்ராஜன், துணைசேர்மன் ஞானமணி, கவுன்சிலர்கள் கீர்த்தி, பெருமாயிஅம்மாள், ராஜம்மாள், ராஜவேல், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பரமசிவம், நாகராஜ், பாண்டி, விக்கி பலர் கலந்து கொண்டனர். மேலும் இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

Tags:    

Similar News