உள்ளூர் செய்திகள்
வெற்றிலை விவசாயிகளுக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும் - உடன்குடி சங்க கூட்டத்தில் தீர்மானம்
- உடன்குடி வெற்றிலை விவசாய சங்க நிர்வாகிகள் கூட்டம் உடன்குடி தினசரி மார்க்கெட்டில் உள்ள வெற்றிலை சங்க அலுவலகத்தில் நடந்தது.
- கூட்டத்தில் வருட சந்தா கூட்டுவது, வெற்றிலை கமிஷன் ஆகியவற்றை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி வெற்றிலை விவசாயசங்க நிர்வாகிகள்கூட்டம் உடன்குடி தினசரி மார்க்கெட்டில் உள்ள வெற்றிலை சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் மகாராஜா தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் ஜெயபாண்டி, ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பொருளாளர் சற்குணராஜ் வரவேற்று பேசினார். சங்க செயலாளர் மங்களராஜ் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்தார். வருட சந்தா கூட்டுவது, வெற்றிலை கமிஷன் ஆகியவற்றை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது.
வெற்றிலை பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் மானியம் வழங்க வேண்டும் என்றும், தாம்பூலக்கவரில் வெற்றிலை பயன்படுத்த வேண்டும் என்றும், சங்க உறுப்பினர்கள் தங்களது காலி இடத்தில் வெற்றிலையை அதிகமாக பயிரிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகி ஜெயதாஸ் நன்றி கூறினார்.