திமிங்கல உமிழ்நீர் பதுக்கி விற்பனை: 5 பேர் கைது
- வனத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
- 9 கிலோ திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல உமிழ்நீரை (ஆம்பர் கிரீஸ்) பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், அந்த பகுதியில் வனத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு திமிங்கல உமிழ்நீர் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னர், தடை செய்யப்பட்ட திமிங்கல உமிழ்நீரை பதுக்கி விற்பனை செய்ய முயன்ற நாகை நம்பியார் நகரை சேர்ந்த வீரமணி, கார்த்திகேயன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த பெலிக்ஸ் பவுல்ராஜ், தஞ்சையை சேர்ந்த தமிழரசன், திருவாரூர் மாவட்டம், முத்துப் பேட்டையை சேர்ந்த கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 9 கிலோ திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் வேளாங்கண்ணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.