உள்ளூர் செய்திகள்
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1000 கனஅடியாக நீடிப்பு
- நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.
ஒகேனக்கல்:
தமிழக கர்நாடக மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு முற்றிலுமாக குறைந்ததன் காரணமாக தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வரை தொடர்ந்து வினாடிக்கு 1200 கன அடியாக நீர்வரத்து நீடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 1000 கன அடியாக சரிந்து வந்தது. இன்று காலை அதே அளவில் நீடித்து வருகிறது.
நீர்வரத்து குறைந்த போதிலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி சினி பால்ஸ், மெயின் அருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.