மயிலாடுதுறையில், தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
- மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
- நீட் ரத்து மசோதா வரும்போது வெளிநடப்பு செய்த கட்சி அ.தி.மு.க.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் தமிழக மாணவர்களிடையே நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசு மற்றும் ஆளுநரை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டமானது மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தின் நிறைவில் பங்கேற்ற திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் , மாநிலங்களவைக்குழு உறுப்பினருமான திருச்சி சிவா கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்விற்கு துணைபோன கட்சி அ.தி.மு.க., . நீட் தேர்வை ரத்து செய்கின்ற திருத்த சட்ட மசோதா வரும்போது வெளிநடப்பு செய்த கட்சி அ.தி.மு.க. என கூறினார்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.