சீர்காழியில், தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி
- 6 கல்லூரிகளை சேர்ந்த 420 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- 15 மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கோட்டாட்சியர்கள் அர்ச்சனா (சீர்காழி), யுரேகா (மயிலாடுதுறை), விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து பேசியதாவது :-
உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது.
தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமை யையும் காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து புரிதலையும் வளரும் தலைமுறையினருக்கு முழுமையாகக் தெரிந்துக்கொள்ளும் வகையில் பண்பாட்டின் முக்கியக் கூறுகளான கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை அவர்களுக்கு உணர்த்துவது சமூகத்தின் கடமை.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஊடகவியலாளர் குணசேகரன் கலந்து கொண்டு ஏன் சிறந்தது தமிழ்நாடு என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
இதில் 6 கல்லூரிகளை சேர்ந்த 420 மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் தமிழ்ப் பெருமிதம் குறித்தும், கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, விளக்கம் தந்து மற்றும் வினாக்கள் கேட்ட மாணவ, மாணவியர்களுக்கு பெருமிதச் செல்வன், பெருமிதச் செல்வி, கேள்வி யின் நாயகன், கேள்வியின் நாயகி, விருதி னையும் 15 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, தாசில்தார்கள் செந்தில்குமார் (சீர்காழி), சரவணன் (தரங்கம்பாடி), மகேந்திரன் (மயிலாடுதுறை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.