உள்ளூர் செய்திகள்

அண்ணாவிளையாட்டு மைதானத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கும் கட்சி.

கடலூரில் தொடர் மழை: அண்ணா விளையாட்டு மைதானத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் தண்ணீர் பயிற்சி பெற முடியாமல் வீரர்கள் அவதி

Published On 2022-10-30 08:02 GMT   |   Update On 2022-10-30 08:02 GMT
  • ஒவ்வொரு விளையாட்டுக்கு என்று தனித்தனி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 3 நாட்களாக கடலூர் நகர் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது.

கடலூர்:

கடலூர் நகரின் மையப்ப குதியான மஞ்சக்குப்பத்தில் அண்ணாவிளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சுதந்திரதின விழா நடை பெறும்போது பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் தேசியகொடி ஏற்றும் விழா நடந்து வருகிறது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் ஒவ்வொரு விளையாட்டுக்கு என்று தனித்தனி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடலூர் நகர் பகுதி மட்டுமல்லாமல் பல்வேறு பகுதியில் இருந்து விளையாட்டு வீரர்கள் வந்து பயிற்சிபெற்று செல்கி றார்கள். இதுதவிர விளை யாட்டு மைதானத்தை சுற்றி நடைபயிற்சிக்கென்று தனியாக இடம் ஒதுக்க ப்பட்டுள்ளது. இங்கு அதிகாலை முதல் குறிப்பிட்ட நேரம்வரை கடலூரை சேர்ந்தவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கராத்தே, நீச்சல்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளுக்கும் தனித்தனியாக இடம் உள்ளது. இவ்வாறு பல்வேறு வசதி கொண்ட இந்த மைதானம் மழைகாலம் வந்து விட்டால்போதும் குளம்போல் ஆகிவிடுகிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் பயிற்சிபெற முடியாமல் அவலநிலைக்கு தள்ளப்படும் சூழல் உருவாகி உள்ளது.

கடந்த 3 நாட்களாக கடலூர் நகர் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடி க்கை எடுத்துவருகிறது. ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 8 செ.மீ. மழை கொட்டி தீர்த்ததால் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் தற்போது குளம்போல் காட்சியளிக்கிறது. இந்த மைதானத்துக்குள் யாரும் செல்லமுடியாத அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இதுபோன்ற நிலை ஒவ்வொரு மழை க்கும் ஏற்படுகறிது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட உயர் அதி காரிகள் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி தண்ணீர் தேங்க விடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நடைபயிற்சி யாளர்கள் கூறுகையில், கடலூர் நகரில் மழை பெய்யும் போதெல்லாம் இதுபோன்ற அவலநிலை நீடிக்கிறது. மைதானத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்த லாம். மைதானத்தில் தண்ணீர் தேங்காத வகை யில் வடிகால் வசதி அமை த்தால் இதுபோன்று தண்ணீர் தேங்காது. எனவே அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்ற னர்.

Tags:    

Similar News