உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்ட பகுதிகளில் தொடர் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2023-10-12 15:37 IST   |   Update On 2023-10-12 15:37:00 IST
  • சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தது.
  • சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

 தமிழ்நாடு முழுவதும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தது.

நேற்று காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், மாலை தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, அரூர், தீர்த்தமலை, பொய்யப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது.

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து திடீரென மழை பொழிந்ததால், விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News