சரக அளவிலான தடகள போட்டி: பாரத் பள்ளி மாணவர்கள் சாதனை
- சரக அளவில் தடகள போட்டிகள் கிருஷ்ணகிரியில் நடந்தது.
- வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி பாராட்டினார்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சரக அளவில் தடகள போட்டிகள் கிருஷ்ணகிரியில் நடந்தது. இதில் கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சாம்பியன் பட்டத்தை வென்றனர். மாணவி தஷிதா 600 மீட்டர், 400 மீட்டர் உயரம் தாண்டுதலில் முதலிடமும், தயனிதா 100, 200 மீட்டர் நீளம் தாண்டுதலில் முதலிடமும் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
வசந்த் குண்டு எறிதலில் முதலிடமும், தஸ்கீன், மோனாஸ்ரீ இறகுபந்தில் முதலிடமும், முகமது சித்திக், பிரதாப் கேரம் விளையாட்டு போட்டியில் முதலிடமும், அப்துல் அலி, இஸ்மாயில் ஜபியுல்லா, முகமது சித்திக், முகமது சவுபன், சுபிஷன், முகமது யூசுப், பிணிகா, ஸ்வப்னா, ஹேப்பி, தானியா, நித்ய பாவிகா ஆகியோர் இறகு பந்தில் 2-ம் இடமும், தர்ணிகா அருள் கேரமில் 2-ம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி பாராட்டினார். அவர் பேசுகையில் மாணவ, மாணவிகள் எதிர்வரும் விளையாட்டு போட்டிகளில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும் என்று கூறி பரிசுகளை வழங்கினார்.
அப்போது பள்ளியின் முதல்வர் விஜயகுமார், துணை முதல்வர் நசீர்பாஷா, உடற்கல்வி ஆசிரியர் தமீஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.