உள்ளூர் செய்திகள்

குறிஞ்சிப்பாடி அருகே ஆசிரியர் வீட்டில் நகை - பணம் திருட்டு: பட்டப்பகலில் துணிகரம்

Published On 2023-10-15 13:09 IST   |   Update On 2023-10-15 13:09:00 IST
  • மதியம் உணவு உண்பதற்காக வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்தது.
  • சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

கடலூர்:

குறிஞ்சிப்பாடி விருப்பாச்சி பகுதியில் வசிப்பவர் சசிக்குமார் (வயது 34). இவரது மனைவி ஆனந்தி. இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணி செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிக்கொண்டு, பள்ளிக்கு சென்றனர். மதியம் உணவு உண்ப தற்காக வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திற ந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க கதவும் திறந்திருந்தது. அதிர்ச்சியடைந்த தம்பதியர், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் உள்ளனவா என சரிபார்த்தனர். அப்போது, பூஜை அறையில் உள்ள லாக்கரில் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக குறிஞ்சிப்பாடி போலீசாரிடம் புகாரளித்த னர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து, தடயங்களை சேகரித்தனர். திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில், பட்டப்பகலில் பூட்டிய வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News