உள்ளூர் செய்திகள்

கண்ணகிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கண்ணகி வீடுபேறு அடைந்த நாள் விழா

Published On 2023-07-29 09:40 GMT   |   Update On 2023-07-29 09:40 GMT
  • ஆடி மாதம் அனுசம் நட்சத்திரத்தன்று கண்ணகி திருநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
  • கண்ணகிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சீர்காழி:

சீர்காழி அடுத்த மேலையூர் பத்தினிக் சீர்கோட்டத்தில் கற்புக்கரசி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அனுசம் நட்சத்திரம் அன்று கண்ணகி திருநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 51 ஆம் ஆண்டு கண்ணகி வீடு பேறு நாள் வழிபாடும் சிலம்புபொழிவும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்பு கண்ணகி பெருமாட்டிக்கு பால், இளநீர், தயிர், சந்தனம், மஞ்சல், உள்ளிட்ட பலவிதமான திரவியப்பொடிகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புஷ்ப அலங்காரமும், மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

பத்தினிக் கோட்டம் அறங்காவலர் ராஜசேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நகரத்தார்கள், பொதுமக்கள், சீனிவாசா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News