உள்ளூர் செய்திகள்

நாங்குநோி பெருமாள் கோவிலில் கன்னி புனா்பூசம் நிகழ்ச்சி

Published On 2022-10-17 14:12 IST   |   Update On 2022-10-17 14:12:00 IST
  • பொன்னடிக்கால் சுவாமிகளின் திருநட்சத்திரம் கன்னி புனா்பூசம் இன்று காலை கொண்டாடப்பட்டது.
  • பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

நெல்லை:

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் மனவாள மாமுனிகளின் பிரதான சீடரும், ஜீயா் பரம்பரையில் முதல்வருமான நாங்குநேரி மடத்தின் 1-வது ஜீயரான பொன்னடிக்கால் சுவாமிகளின் திருநட்சத்திரம் கன்னி புனா்பூசம் இன்று காலை கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி இன்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஸ்ரீ வரமங்கா சமேத தெய்வநாயக பெருமாள் பல்லக்கில் மடத்திற்கு எழுந்தருளினாா். மாப்பிள்ளை, பெண்ணை வரவேற்க தங்கத்தினாலான விளக்கு, தாம்பூலம், வட்டில் மற்றும் ஆரத்தி தட்டு பயன்படுத்தப்பட்டது.

தொடர்ந்து பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. திருமஞ்சன தீர்த்தம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. மடத்தின் சாா்பில் பெருமாள், தாயாருக்கு பட்டு வஸ்திரம், வெற்றிலை பாக்கு, தேங்காய், பூ மாலைகள் மற்றும் நெய் சீா்வாிசையாக சமா்பிக்கப்பட்டு நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று மாலையில் மகரகண்டி என்னும் மாலை, ஜடை ஆகியவை சுவாமி மற்றும் தாயாருக்கு சாற்றப்படுகின்றது. இந்த மாலை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அதாவது இன்றைய தினம் மட்டுமே அணிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News