உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-09-29 09:10 GMT   |   Update On 2022-09-29 09:10 GMT
  • மது அருந்துவதால் இவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
  • தனது அறையில் சென்று கதவை உள்பக்கமாக பூட்டி உள்ளார். 2 தினமான போதும் கணவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த மனைவி அறை கதவை தட்டியுள்ளார்.

கன்னியாகுமரி :

களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார்(34) இவர் அதங்கோடு பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தனர். இவருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இவர் குடிபழக்கம் உள்ளவர். பாலவிளை பகுதியில் தனது மனைவி வீட்டில் தங்கி வருகிறார். இவர் மது அருந்துவதால் இவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் மனைவியிடம் தகராறு செய்து விட்டு தனது அறையில் சென்று கதவை உள்பக்கமாக பூட்டி உள்ளார். 2 தினமான போதும் கணவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த மனைவி அறை கதவை தட்டியுள்ளார். கதவு திறக்காததினால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இது குறித்து அக்கம்பக்கத் தினர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஜித்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News