குமரி மாவட்டத்தில் ஓலையால் வேயப்பட்ட கூரையின் கீழ் பட்டாசு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை
- சுமார் 100-க்கும் மேற்பட்ட மொத்த, சில்லறை விற்பனையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவல கத்தில் நடந்தது
- தீயணைப் புத்துறை அலுவலர்கள் கொண்ட 18 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நாகர்கோவில் : குமரி மாவட்டத்திலுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட மொத்த, சில்லறை விற் பனையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவல கத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன்.ஆர்.டி.ஓ , சேதுராமலிங்கம் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர் பட்டாசு விற்பனை குறித்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் பட்டாசு சில்லறை மற்றும் மொத்த விற்பனை உரிமம் பெற்ற இடங்கள், பட்டாசு தயாரிக்க உரிமம் பெற்ற இடங்கள் மற்றும் பட்டாசு விற்பனை செய்வதை கண்காணிக்கும் பொருட்டு தாசில்தார்கள், காவல்துறை அலுவலர்கள், தீயணைப் புத்துறை அலுவலர்கள் கொண்ட 18 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குழு அலுவலர்கள் கடை பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், கையாளப்படுகின்ற நட வடிக்கைகள் குறித்து தொழிற்சாலை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆகியோர்களால் பயிற்சி வழங்கப்பட்டது.
ஆய்வின்போது பட்டாசு உரிமம் பெற்ற இடத்தில் அல்லாது வேறு இடங்களில் விற்பனை செய்வதோ அனுமதி பெற்ற இடத்தை விட அதிகமான இடங்களில் அமைத்து விற்பனை செய்வ தோ கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த பட்டாசு களை தீயணைப்பு அலுவலர் பறிமுதல் செய்து பாது காப்பாக செயலிழக்க செய்ய வேண்டும்.
அரசு வழிகாட்டி நடை முறை பின்பற்றாமல் பட்டாசு விற்பனை உரிமம் புதுப்பிக்க விண்ணப்பித்த வர்கள் உரிய வழிமுறையி னை பின்பற்றாமல் இருப்பது விசாரணை யின்போது கண்டறியப் பட்டுள்ளது. இதுபோன்ற உரிமங்களின் உரிமதாரர்கள் உரிய வழிகாட்டு நெறி முறைப்படி விற்பனை உரிம இடங்களில் மாற்றங்கள் செய்வதோடு வேறு இடங்களில் விற்பனை செய்திட வேண்டும். பட்டாசு விற்பனை கடை முன்பு பட்டாசு வெடிக்க கூடாது என்ற வாசகமும், புகைப்பிடித்தல் கூடாது என்ற வாசகமும் கொண்ட எச்சரிக்கை பலகை அல்லது பேனர் பொதுமக்கள் அறி யும் வண்ணம் கடைகளின் முன்பு வைக்கப்பட வேண் டும்.
வெடிபொருட்கள் விதி 2008-ன் படி அங்கீகரிக்கப் பட்ட உரிமம் பெற்ற தயா ரிப்பாளர்களிடமிருந்து ஒப்புதல் அளிக்கப்பட்ட முத்திரையுடைய பெட்டி களையே பட்டாசு விற்பனை யாளர்கள் வாங்க வேண்டும். டிரக், கார் போன்ற வாகனங்களை பட்டாசு விற்பனை கடை அருகில் நிறுத்தம் செய்வதை தவிர்த்திட வேண்டும். மேற்படி வாகனங்களை இயக்கும்போது தீப்பொறி ஏற்பட்டு விபத்து நடைபெற வாய்ப்புள்ளதால் இவற்றை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும்.
உதிரி பட்டாசுகளை விற்பனை செய்வதைத்த விர்க்க வேண்டும். கடை களை மூடும்போது அனைத்து மின் இணைப்பு களையும் துண்டித்த பின்னரே கடையை மூட வேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய பெயிண்ட், எண்ணெய் மற்றும் காகி தங்களை கடைகளிலோ அல்லது கடைகளின் அரு கிலோ சேமித்தல் கூடாது. பட்டாசு, அதிர்வேட்டு போன்ற வெடி பொருட் களை உரிமம் பெறாத இடத்தில் தயார் செய்யக் கூடாது.
அவ்வாறு தயார் செய்வது கண்டறியப் பட்டால் வெடி பொருள் சட்ட விதிகளின்படி குற்ற வியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எக்காரணம் கொண்டும் ஓலையால் வேயப்பட்ட கூரையின் கீழ் பட்டாசு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. அவசர கால கட்டணமில்லா தொலைபேசி எண்.112-னை பொதுமக்கள் பயன் படுத்தலாம். சீன பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.