உள்ளூர் செய்திகள்

குளச்சலில் அடுத்தடுத்து கோவில், கடைகளை உடைத்து பணம் கொள்ளை

Published On 2022-07-11 13:21 IST   |   Update On 2022-07-11 13:21:00 IST
  • அதிகாலை கோவிலை திறக்க பூசாரி வரும்போது உண்டியல் பெட்டியை காணவில்லை
  • கடையில் ஒரு மாதத்திற்கு முன்பு மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து 22,000 திருடிச் சென்றதும் தெரியவந்தது

கன்னியாகுமரி:

குளச்சல் களிமார் பாலத்தின் அருகில் ரோட்டோரத்தில் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜாரி கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.

இன்று அதிகாலை கோவிலை திறக்க பூசாரி வரும்போது உண்டியல் பெட்டியை காணவில்லை. திடுக்கிட்ட அவர் குளச்சல் போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

குளச்சல் பழைய மார்க்கெட்டை சேர்ந்தவர் ராஜேஷ் வயது 46 இவர் குளச்சல் களிமார் பாலம் அருகே ஒரு பழக்கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் இன்று அதிகாலை கடையை திறக்க வரும்போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இவருடைய இந்த கடையில் ஒரு மாதத்திற்கு முன்பு மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து 22,000 திருடிச் சென்றதும் தெரியவந்தது. இது குறித்து ராஜேஷ் குளச்சல் போலீசில் புகார் செய்தார் புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லியோன் நகரில் சுபீஸ் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரின் கடையின் பின் பக்க கதவு உடைத்து மிட்டாய், சிகரெட், மற்றும் ரூ.5000 மதிப்புள்ள பொருட்களை திருடிசென்றுள்ளனர். இது குறித்து சுபீஸ் குளச்சல் போலீஸில் புகார் செய்தார்.குளச்சல் அருகே பாலத்தின் அருகில் நேசம் என்ற மூதாட்டி பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரின் கடையின் மரக்கதவை உடைத்து சிகரட் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து மூதாட்டி நேசம் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.

அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பீதி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News