- தமிழ்நாடு சிறப்பு காவல் அணி சாம்பியன்
- 92 ஆண்கள் அணி மற்றும் 14 பெண்கள் அணி கலந்து கொண்டன.
நாகர்கோவில்:
தமிழ்நாடு கூடைப்பந்து கழகம், கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் பொன் ஜெஸ்லி கல்வி குழுமம் இணைந்து மாநில அளவிலான மதுரை மண்டல கூடைப்பந்து போட்டியை 5 நாட்கள் நடத்தின. இதில் 92 ஆண்கள் அணி மற்றும் 14 பெண்கள் அணி கலந்து கொண்டன.
ஆண்கள் அணி இறுதிப் போட்டியில் மதுரை தமிழ்நாடு சிறப்பு போலீஸ் அணியும் நாகர்கோவில் ஏசியன் ஸ்போர்ட்ஸ் அணியும் மோதின. இதில் மதுரை தமிழ்நாடு சிறப்பு போலீஸ் முதலிடத்தை வென்றது. இரண்டாம் இடத்தை நாகர்கோவில் ஏசியன் ஸ்போர்ட்ஸ் கிளப் வென்றது. மூன்றாம் பரிசை பிகாசா மதுரை அணி வென்றது நான்காம் இடத்தை டி.பி.ஏ. ப்ளூ அணி வென்றது.
மகளிர் போட்டியில் மதுரை ஆயுதப்படை போலீஸ் முதலிடம் வென்ற து. இரண்டாம் இடத்தை கராஷ்யன் தூத்துக் குடி அணி வென் றது. மூன்றாம் இடத்தை பசுமை விருதுநகர் அணி வென்றது. நான்காம் இடத்தை நாகர்கோவில் எம்பரர் அணி வென்றது.
கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக சேர்மன் மற்றும் பொன் ஜெஸ்லி கல்வி குழுமம் சேர்மன் பொன் ராபர்ட் சிங் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். குமரி மாவட்ட கூடைப் பந்தாட்ட கழக புரவலர் வள்ளலார் பேரவை சுவாமி பத்மேந்திரா, பி2சி டெக்னாலஜி மேனேஜிங் டைரக்டர் சதீஷ் பிரபு மற்றும் தொழில் அதிபர்கள் சரவணன், ஆஸ்டின் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் ஆஸ்டின், செயலாளர் மகேஷ், பொருளாளர் சகாய சியாமல், துணைத் தலைவர் நெல்லையப்பன், டென்னிசன், பிரேம் சந்தர், கிறிஸ்டோ சகி துணைச் செயலாளர் டாக்டர் அருண் ஆகியோர் விளை யாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந் தனர்.