உள்ளூர் செய்திகள்
குலசேகரம் அருகே கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்
- அனிஷா 2 நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணையும், அவரது குழந்தையையும் தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி :
குலசேகரத்தை அடுத்த வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் ஷினு (வயது 29). ஆட்டோ டிரைவர்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவர் பாறசாலை பகுதியை சேர்ந்த அனிஷா (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 மாத குழந்தை உள்ளது.
அனிஷா 2 நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை.
இதற்கிடையே வெளியே சென்றிருந்த அனிஷாவின் கணவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது அனிஷாவையும், குழந்தையையும் காணவில்லை.
இதனால் பதறி போன ஷினு, அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர்களை காணவில்லை. இதையடுத்து அவர் குலசேகரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணையும், அவரது குழந்தையையும் தேடி வருகிறார்கள்.