உள்ளூர் செய்திகள்

நாகர். அண்ணா பஸ் நிலையத்தில் இன்று மூதாட்டியிடம் நகை பறித்த பெண்ணை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்

Published On 2022-09-22 09:21 GMT   |   Update On 2022-09-22 09:21 GMT
  • ஒரே நாளில் அடுத்த டுத்து 3 பெண்களிடம் 17 பவுன் நகை பறிக்கப்பட்டது. இது குறித்து கோட்டார் போலீசில் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
  • அவரது பின்னால் நின்று கொண்டிருந்த பெண், மூதாட்டியின் கழுத்தில் கிடந்த சுமார் 7 பவுன் நகையை பறித்தார்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் பகுதிகளில் ஓடும் பஸ்சில் பெண்க ளிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

நேற்று ஒரே நாளில் அடுத்த டுத்து 3 பெண்களிடம் 17 பவுன் நகை பறிக்கப்பட்டது. இது குறித்து கோட்டார் போலீசில் பெண்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்ததை யடுத்து பஸ் நிலையம் பகுதி களில் கண்காணிப்பை தீவிர படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இன்று காலை அண்ணா பஸ் நிலைய பகுதிகளில் போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அழகிய பாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் காலை 10.30 மணி அளவில் அண்ணா பஸ் நிலையத்தில் பஸ்சை விட்டு இறங்க முயன்றார். அப்போது அவரது பின்னால் நின்று கொண்டிருந்த பெண், மூதாட்டியின் கழுத்தில் கிடந்த சுமார் 7 பவுன் நகையை பறித்தார்.

இதை பார்த்த மற்றொரு பெண் கூச்சலிட்டார். அதற்குள் நகை பறித்த பெண் பஸ்சை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார். பொதுமக்கள் கூச்ச லிட்டதை தொடர்ந்து பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அந்த பெண்ணை துரத்தினார்கள்.

ஆனால் அந்த பெண் பஸ் நிலையத்தை விட்டு வேகமாக வெளியேறி செம்மாங்குடி ரோடு வழி யாக ஓடினார். பின்னர் அந்த பகுதியில் உள்ள குறுக்குச்சாலை வழியாக சென்றபோது அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

இது தொடர்பாக கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோட்டார் போலீசார் அண்ணா பஸ்நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்கள் பிடியில் இருந்த பெண்ணை மீட்டனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு நடத்திய விசாரணையில் அவர் சேலம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

இவருக்கும் நேற்று நடந்த கொள்ளை சம்பவத்திற்கும் தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள். இந்த கொள்ளை சம்பவத்தில் இவருடன் வேறு சில பெண்களும் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கி றார்கள். அவர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அண்ணா பஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News