உள்ளூர் செய்திகள்

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரூராட்சிகளில் 6 சாலைகள் சீரமைப்பு பணி

Published On 2022-06-14 13:26 IST   |   Update On 2022-06-14 13:26:00 IST
  • அமைச்சர் மனோதங்கராஜ், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
  • 6 சாலைகளுக்கு ரூ.4 கோடியே 23 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கீடு

கன்னியாகுமரி :

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல், பாலப்பள்ளம், கீழ்குளம், கிள்ளியூர் போன்ற பேரூராட்சிகளில் உள்ள சாலைகள் பழுத டைந்து மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது.

இதனால் இந்த சாலைகளில் பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்து செல்லவும் முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

எனவே அந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், தமிழக முதலமைச்சர், நகராட்சி துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தார்.

இதன் அடிப்படையில் இந்த சாலைகளை சீரமைக்க நபார்டு திட்டத்தின் கீழ் கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட மலையன்விளை - காக்க விளை சாலையை சீரமைக்க ரூ.82 லட்சமும், பாலவிளை - இரட்டை குளம் சாலையை சீரமைக்க ரூ.54 லட்சமும், பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட மிடாலக்காடு - மிடாலக் குளம் சாலையை சீரமைக்க ரூ.86 லட்சமும், கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட செந்தறை - உடவிளை சாலையை சீரமைக்க ரு.70 லட்சமும், குமரி நகர் - காளியர் தோட்டம் - அரசகுளம் சாலையை சீரமைக்க ரூ.54.75 லட்சமும், கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட செவ்வேலி - மாங்கரை - ஐ.ஒ.பி. வங்கி சாலையை சீரமைக்க ரு. 77 லட்சமும் என 6 சாலைகளுக்கு ரூ.4 கோடியே 23 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதை யெடுத்து இந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Tags:    

Similar News