உள்ளூர் செய்திகள்

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

Published On 2023-08-16 06:53 GMT   |   Update On 2023-08-16 06:53 GMT
  • ஆடி அமாவாசையை முன்னிட்டு நடந்தது
  • குழித்துறையில் மக்கள் கூட்டம் அலைமோதியது

கன்னியாகுமரி, ஆக.16-

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

இந்த ஆண்டு ஆடி அமா வாசை இரண்டு நாட்கள் வந்தது. கடந்த மாதம் (ஜூலை)17-ந்தேதி மற்றும் இன்று(16-ந்தேதி) என 2 நாட்கள் ஆடி அமாவாசை கடைபிடிக்கப்பட்டது. இன்று ஆடி அமாவாசை என்பதால் கன்னியாகுமரி கடலில் புனித நீராடு வதற்காக இன்று அதிகாலை 2 மணியில்இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரியில் குவியத் தொடங்கினார்கள்.

அவர்கள் கன்னியா குமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள். அதன் பிறகு ஈரத்துணியுடன் கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள்.

அவ்வாறு பூஜை செய்து பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.

பின்பு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ள சர்க்கரதீர்த்த காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில் ஆகியகோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கடற்கரை, கடைவீதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் கட்டுக் கடங்காத வகையில் காணப்பட்டது. இதனால் அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் மற்றும் கன்னியா குமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆடி அமாவாசையை யொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும், உஷ பூஜை, ஸ்ரீபலி பூஜை, நிவேத்ய பூஜை, உச்சிகால பூஜை, உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.அதன்பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழை வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப் பட்டார்கள்.

இரவு 8.30 மணிக்கு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாக னத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அம்மன்வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவரும் போது பக்தர்கள் வழி ெநடுகிலும் தேங்காய் பழம் படைத்து திருக்கணம்சாத்தி வழிபடுவார்கள்.

அம்மன் வீதிஉலா முடிந்த பிறகு இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில்ஆராட்டுநிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவே சிக்கும் நிகழ்ச்சியும் நடக்கி றது.

அதன்பிறகு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்த ருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி 3முறை மேளதாளம் முழங்க வலம் வரசெய்கிறார்கள்.பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அதன்பிறகு அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாரா தனையும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரிபகவதி அம்மன் கோவில் நிர்வா கத்தினர் செய்து வருகி றார்கள். ஆடி அமாவா சையையொட்டி இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் அரசு விடுமுறை விடப்பட்டுஇருந்தது.

அரசுபோக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், வள்ளியூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு கூடுதல்அரசுசிறப்பு பஸ்கள்இயக்கப்பட்டன.கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில்சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

ஆடி அமாவாசை பலி தர்ப்பணத்தை முன்னிட்டு குழித்துறை மகாதேவர் கோவில் அருகே இன்று சிறப்பு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் செய்தனர்.இந்த ஆண்டு பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு அமாவாசை வந்தது. கடந்த ஜூலை 17-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு கேரள பஞ்சாங் கத்தின் படி கேரள மக்கள் முதல் அமாவாசை அன்று பலி தர்ப்பணம் செய்தனர். இதனையொட்டி கேரளாவில் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டது.

இரண்டாவது ஆடி அமாவாசையான இன்றும் பெரும்பான்மையான கேரள மக்கள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் பலி தர்ப்பணம் செய்வது வழக்கம். இன்று அதிகாலை 4.30 மணி முதல் பலி தர்ப்பணம் செய்தனர்.பொதுமக்கள் குளித்து விட்டு தும்பு இலையில் சோறு, பவித்திரம், துளசி, கட்ட பில் போன்றவை வைத்து தமது முன்னோர் களை நினைத்து பலித் தர்ப்பணம் செய்தனர்.

பின்பு குழித்துறை மகாதேவர் கோவில், சாமுண்டீஸ்வரி தேவி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, முன்னோர் கள் நினைவாக வாவுபலி திடலில் இருந்து மரக் கன்றுகளை வாங்கி சென்றனர்.

Tags:    

Similar News