உள்ளூர் செய்திகள்
கரூரில், குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர் கூட்டம்
- கரூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் கடைகளில் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம், சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை பொதுமக்கள் நேரில் சந்தித்து உரிய ஆவணங்களுடன் தெரிவித்தனர்.
கரூர்
கரூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்ட வழங்கல் அலுவலர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் மற்றும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தல், செல்போன் எண் பதிவு செய்தல் மற்றும் கடைகளில் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம், சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை பொதுமக்கள் நேரில் சந்தித்து உரிய ஆவணங்களுடன் தெரிவித்தனர்.