- சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
- கலெக்டர் தேசிய கொடியேற்றினார்
கரூர்,
குடியரசு தினவிழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் டாக்டர். த.பிரபுசங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணி–வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பின்னர் சமாதானப்புறாக் களையும், தேசியக்கொடி வண்ணத்திலான பலூன்க–ளையும் பறக்க விட்டார். மாவட்ட காவல் கண்கா–ணிப்பாளர் சுந்தர–வதனம் முன்னிலை வகித்தார்.
அதனைத்தொடர்ந்து கலெக்டர் த.பிரபுசங்கர், சிறப்பாக பணியாற்றிய பல்வேறு அரசு துறைகளை சார்ந்த நபர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். விழாவில் 55 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.