தேனி மாவட்டத்தில் தரமற்ற உணவுகள் வழங்கிய 8 நிறுவனங்களின் உரிமம் ரத்து அதிகாரிகள் உத்தரவு
- தரமற்ற உணவு வழங்கிய 10 நிறுவன ங்களுக்கு தொடர்ந்து 7நாட்கள் அவகாசம் வழங்கி திருத்தம் செய்து அறிக்கை வழங்க பதிவு தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
- உதாசீனம் செய்து வந்த 8 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
வருசநாடு:
தேனி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி கம்பம், சின்னமனூர், போடி நாயக்கனூர், தேனி, ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் நகர் மற்றும் வட்டார பகுதிகளில் சபரிமலை யாத்திரை செல்லும் வழித்தடங்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள், பள்ளி மற்றும் கல்லூரி வளாக ங்கள்,சந்தை, பஸ் நிலைய பகுதிகளில் உள்ள உணவகங்கள், இறைச்சி வியாபார கடைகள்,
மளிகை கடைகள் மற்றும் பேக்கரி, டீக்கடைகளில் அந்தந்த வட்டார பகுதிகளில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 100-க்கும் மேற்பட்ட உணவு தொழில் மேற்கொள்ளும் இடங்கள் ஆய்வு மேற்கொண்டு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் மற்றும் ஒழுங்கு முறை விதிமுறைகள் படி பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்காதது மற்றும் அரசு தடை செய்த 75 மைக்ரான் குறைவுள்ள உணவு தரம் அல்லாத பிளாஸ்டிக் பைகள், தாள்கள், டம்ளர், தட்டுகளில் சூடான உணவு பொருட்களை பயன்படுத்து வது, சமையல் எண்ணெயை திரும்ப திரும்ப உணவு தயாரிக்க மறுசுழற்சி செய்வது,
அரசின் RUCO திட்டத்தின் கீழ் பயோடீசல் தயாரிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மறுசுழற்சி செய்யும் சமையல் எண்ணெயை வழங்காமல் இருப்பது போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி நிறுவனங்க ளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் உணவு பாதுகாப்பு சட்ட விதி-55 ல் வழங்க பட்டது.
அறிவிப்பு பெற்று கொண்டு மேம்படுத்தி கொள்ளாத 39 வியாபார இடங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஆய்வு மேற்கொண்டு 15 நாட்கள் அவகாசம் வழங்கி திருத்திக் கொள்ள பதிவு தபால் மூலம் மேம்பாட்டு அறிக்கை வழங்கப்பட்டது.
இதனை பொருட்படுத்தா மல் இருந்த 10 நிறுவன ங்களுக்கு தொடர்ந்து 7நாட்கள் அவகாசம் வழங்கி திருத்தம் செய்து அறிக்கை வழங்க பதிவு தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் எந்த வித அபிவிருத்தி நடவடிக்கை களும் மேற்கொள்ளாமல் அலட்சிய போக்கில் சுய லாபநோக்கில் தொடர்ந்து பொதுமக்கள் ஆரோக்கிய த்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த எட்டு நிறுவனங்களுக்கு மேலும் 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வழங்கிய நோட்டீஸ் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மூன்று முறை அவகாசம் வழங்கி பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மேம்பாட்டு அறிக்கை ஆகியவற்றை உதாசீனம் செய்து வந்த இந்த 8 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
மேலும் சம்பந்தப்பட்ட கடை மற்றும் நிறுவன ங்களுக்கு வியாபாரத்தை நிறுத்தி கொள்ள உத்தரவு வழங்க பட்டது. உணவு பாதுகாப்பு ஒழுங்கு முறை விதிமுறைகள் படி மேம்பாட்டு செயல் முறை உத்தரவில் அறிவுறுத்திய குறைகளை கலைந்து உரிமம் புதுப்பிக்க வும் எச்சரிக்கப்பட்டது. இந்த தகவலை தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ராகவன் தெரிவித்துள்ளார்.