உள்ளூர் செய்திகள் (District)

பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-04-08 08:16 GMT   |   Update On 2023-04-08 08:16 GMT
  • வாடிப்பட்டி அருகே பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • விழா ஏற்பாடுகளை தாதம்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 8-வது வார்டு தாதம்பட்டி சடையாண்டி கோவில் வளாகத்தில் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு முதல் நாள் மாலை 6 மணிக்கு கணபதி ஹோமம், முதலாம் கால யாக பூஜை, வாஸ்துசாந்தி, பூர்ணாஹூதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. 2-ம் நாள் காலை 8 மணிக்கு 2-ம் காலை யாகசாலை பூஜை, கடம் புறப்பாடாகி காசி, ராமேசுவரம், அழகர் கோவில் உள்ளிட்ட புண்ணிய திருத்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு காலை 10 மணிக்கு கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

மூலவர் பால விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கும்பாபிஷேகத்தை பாலாஜி பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். பின்னர் அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடு களை தாதம்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News