உள்ளூர் செய்திகள்
- மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
- கடந்த 2 வருடங்களாக கணவர் வேலைக்கு செல்லாததால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் வடபகுதியை சேர்ந்தவர் அருண்(வயது37).இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக வேலைக்கு செல்லவில்லை இவருடைய மனைவி வித்யா(34). இவர்களுக்கு 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கடந்த 2 வருடங்களாக கணவர் வேலைக்கு செல்லாததால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அருண் மனைவி வித்யாவை தாக்கியுள்ளார். இதனால் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் வித்யா கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர்.