சீர்காழி சட்டைநாதர் கோவிலில் அமைச்சர்கள் சாமி தரிசனம்
- திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு.
- சிவாச்சாரியார்கள் பூர்ண கும்பமரியாதை அளித்து வரவேற்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.
இக்கோயிலில் அமைந்துள்ள மலை மீது தோனியப்பர் உமா மகேஸ்வரி அம்மன், சட்டநாதர் ஆகிய சுவாமிகள் காட்சி தருகின்றனர். திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு நடைபெற்ற ஸ்தலம் ஆகும்.
பிரசித்திப் பெற்ற இக்கோயிலுக்கு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே .பன்னீர்செல்வம் ஆகியோர் வந்தனர்.
கோயில் நிர்வாகம் சார்பில் குமர கட்டளை தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டை நாதர் சுவாமி, பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அம்மன், மலை மீது அருள்பாளிக்கும் சட்டைநாதர் சுவாமி ,தோணியப்பர் ஆகிய சுவாமி சந்நிதிகளில் அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தனர்.
பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் சுவாமி படங்கள் மற்றும் பிரசா தங்கள் வழங்கப்பட்டது. திருச்சி மேயர் அன்பழகன், மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., சீர்காழி எம்.எல்.ஏ எம்.பன்னீர்செல்வம், திமுக பிரமுகர்கள் நம்பி, வழக்குரைஞர் இராம.சேயோன், மாவட்ட பொருளாளர் மகா அலெக்சாண்டர் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் திமுக நகர செயலாளர் சுப்பராயன், நகர்மன்ற தலைவர் துர்காராஜ சேகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், வள்ளிமுத்து மாவட்ட பொறியாளர் அணி தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.