கடையநல்லூர் அருகே மேற்கூரை இடிந்து விழுந்து காயமடைந்த தொழிலாளிக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்
- மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாரியப்பன் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சென்று மாரியப்பனை நேரில் பார்த்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோவில் தெருவை சோ்ந்தவா் மாரியப்பன் (வயது42). கூலித் தொழிலாளி. கடந்த 5-ந்தேதி இரவு இவா் வீட்டினுள்ளும், குடும்பத்தினா் வெளிப்புறத் திண்ணையிலும் தூங்கினார்கள் . அப்போது இரவு பெய்த பலத்த மழையால், இவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாரியப்பன் காயமடைந்தாா்.
அவரை கடையநல்லூர் தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறை வீரா்கள் சென்று, இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மாரியப்பனை மீட்டு கடையநல்லூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தற்போது மருத்துவமனையில் மாரியப்பன் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து கடையநல்லூர் எம்.எல்.ஏ. கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சென்று மாரியப்பனை நேரில் பார்த்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து மழைக்காலம் என்பதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அதிக அளவு அனுமதிக்கப்பட்டி ருந்த குழந்தைகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதனைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவர் பிஸ்மி நிசாவிடம் அதிக அளவு குழந்தைகளை தாக்கும் வைரஸ் காய்ச்சல் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை குறித்து கேட்டறிந்து குழந்தைகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டு என கேட்டுக் கொண்டார். அப்போது மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், கடையநல்லூர் நகர செயலாளர் எம்.கே. முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.