உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் பணம் வாங்கி மோசடி நாமக்கல் ஈமு கோழி நிறுவன நிலங்கள் ஏலம்

Published On 2023-06-18 14:15 IST   |   Update On 2023-06-18 14:15:00 IST
  • ஈமு பார்ம்ஸ் மற்றும் வேலவன் கார்டன் சிட்டி டெவலப்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் பொது மக்களிடம் இருந்து நிதி மோசடி செய்ததால், குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நாமக்கல், பொருளாதார குற்றப் பிரிவு போலீசாரால் விசா ரணை செய்யப்பட்டது.
  • கோர்ட் உத்தரவின்படி, அந்த நிறுவனத்தின் உரிமை யாளர்கள் சிவக்குமார், கனகம் மற்றும் பழனி யம்மாள் ஆகியோர்களிடம் இருந்து 3 வீட்டு மனைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் மணி மேகலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல், மோகனூர் ரோட்டில் இயங்கி வந்த செல்லம் ஈமு பார்ம்ஸ் மற்றும் வேலவன் கார்டன் சிட்டி டெவலப்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் பொது மக்களிடம் இருந்து நிதி மோசடி செய்ததால், குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நாமக்கல், பொருளாதார குற்றப் பிரிவு போலீசாரால் விசா ரணை செய்யப்பட்டது. இது குறித்து, கோவை, தமிழ்நாடு முதலீட்டா ளர்கள் நலன்கள் பாது காப்பு சட்ட சிறப்பு கோர்ட் உத்தரவின்படி, அந்த நிறுவனத்தின் உரிமை யாளர்கள் சிவக்குமார், கனகம் மற்றும் பழனி யம்மாள் ஆகியோர்களிடம் இருந்து 3 வீட்டு மனைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பிள்ளைகளத்தூர் கிரா மத்தல் உள்ள 2,360 சதுரடி கள் கொண்ட 2 வீட்டு மனைகள், மற்றும் ராசி புரம் தாலுக்கா, காட்டூர், காட்டுக்கொட்டாய் பகுதி யில் உள்ள 3,716 1/4 சதுரடி கொண்ட வீட்டுமனை ஆகிய 3 வீட்டு மனைகள், நாமக்கல், மாவட்ட வருவாய் அலுவல ரால், வருகிற 21-ந் தேதி மாலை 3 மணிக்கு நாமக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.

நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் மற்றும் நாமக்கல், ராசிபுரம், சேந்த மங்கலம், மோகனூர், கொல்லி மலை, திரு ச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமார பாளையம் தாசில்தார் அலுவலகம் மற்றும் நாமக்கல், திருச்செ ங்கோடு ஆர்.டி.ஓ அலுவலகம் ஆகிய அலு வலகங்களின் அறிவிப்பு பலகையில் ஏல நிபந்த னைகள் ஒட்ட ப்பட்டுள்ளது.

ஏல நிபந்தனை களுக்கு உட்பட்டு ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமு ள்ளவர் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

மேலும், ஏல தேதிக்கு முன்பாக, விருப்பமுள்ள வர்கள், நாம க்க ல், பொரு ளாதார குற்றப் பிரிவு போலீஸ் டி.எஸ்.பி மூலம் ஏல சொத்துக்களை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News