உள்ளூர் செய்திகள்
பரமத்தி வேலூர் பால அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
- பாலஅய்யப்ப சாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பவுர்ணமியன்று பால அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், செட்டியார் தெருவில் எழுந்தருளியுள்ள பாலஅய்யப்ப சாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பவுர்ணமியன்று பால அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த வருடமும் பால அய்யப்ப சாமி கோவிலில் கணபதி ஹோமும், 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாலஅய்யப்ப சாமி அலங்க ரிக்கப்பட்ட வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பாலஅய்யப்பசாமி கோவில் பவுர்ணமி குழுவினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.