உள்ளூர் செய்திகள்

காரிமங்கலம் அருகே 2 டன் குட்கா மூட்டைகள் பறிமுதல்

Published On 2023-05-03 09:35 GMT   |   Update On 2023-05-03 09:35 GMT
  • போதை பொருட்களை சமூக விரோதிகள் கடத்துவதாக தர்மபுரி எஸ்.பி ஸ்டீபன்ஜேசுபாதத்திற்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • 3 லட்சம் ரூபாய் மதிப்புடைய போதை பொருட்களையும், இரண்டு மினி சரக்கு வேன் பறிமுதல் செய்தனர்.

காரிமங்கலம்,

கர்நாடகா மாநிலம் பெங்களுருவிலிருந்து, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம் வழியாக சேலம் மாவட்டத்திற்கு குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை சமூக விரோதிகள் கடத்துவதாக தர்மபுரி எஸ்.பி ஸ்டீபன்ஜேசுபாதத்திற்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து காரிமங்கலம் நகரம், அகரம் பிரிவு சாலை மொரப்பூர் பிரிவு சாலை, கும்பாரஅள்ளி பிரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது கீழ் கொள்ளுப்பட்டியில் காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அப்பகுதியில் ஒரு மினிசரக்கு வாகனத்தில் இருந்து மற்றொரு மினி சரக்கு வாகனத்தில் மூட்டைகளை மாற்றி கொண்டிருந்தனர்.

சந்தேகத்தின் பேரில் போலீசார் சரக்கு வாகனத்தின் அருகில் சென்ற போது டிரைவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

போலீசார் மூட்டைகளை பிரித்து சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர்.இதில் 50 மூட்டைகளில் சுமார் 2- டன் அளவிலான 3 இலட்சம் ரூபாய் மதிப்புடைய போதை பொருட்களையும், இரண்டு மினி சரக்கு வேன் பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.மூட்டை மூட்டையாக குட்கா கடத்திய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News