பாவூர்சத்திரத்தில் புதிய மாட்டுச்சந்தை திறப்பு
- பாவூர்சத்திரத்தில் ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெற்று வந்தது.
- மாடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிக அளவில் சந்தைக்கு வந்திருந்தனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த மாடுகள் வளர்ப்போர் மாடுகளை வாங்குவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ கடையம் மாட்டுச்சந்தை மற்றும் பிற மாட்டுச்சந்தையையே பயன்படுத்தும் சூழ்நிலையில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் பாவூர்சத்திரத்தில் ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெற்று வந்தது. தற்போது ஆட்டுச் சந்தை நடைபெறும் பகுதியின் அருகே இன்று முதல் புதிதாக மாட்டுச்சந்தை பாவூர்சத்திரம் பகுதி வியாபாரிகள் தொடங்கி உள்ளனர்.
இன்று முதல் நாள் மாட்டுச்சந்தை என்பதால் மாடுகளின் வரத்து மிகவும் குறைந்த அளவே இருந்தது. இருப்பினும் மாடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.
பாவூர்சத்திரம் மாட்டுச்சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில் வாரத்தில் புதன் கிழமை தோறும் மாட்டுச்சந்தையானது தொடர்ந்து நடைபெறும் என கூறினர். இதனை பயன்படுத்தி மாடுகளை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் பயனடை யுமாறு கேட்டுக் கொண்டனர்.